Wednesday 27 November 2013

முத்திப்பேறு பெற்ற தேவசகாயம் பிள்ளையிடம் செபம்

எல்லா வல்ல இறைவனின் அருள்பெற்ற மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையே, எங்கள் இந்திய மண்ணின் மைந்தரே, கிறிஸ்துவுக்காக நீர் பல்வேறு துன்ப துயரங்களைப் பொறுமையோடு அனுபவித்தீர். இறுதியாக நீ்ர் உம்முடைய உயிரையே பலியாக்கி விண்ணகத்தில் பேரின்ப வாழ்வை இறைவனின் மாபெரும் கொடையாகப் பெற்றுள்ளீர். இறைவன் உமக்கு அளி்த்த இந்த உன்னத மகிமைக்காக நாங்கள் இறைவனைப் போற்றிப் புகழ்கிறோம். அவருக்கு நன்றி கூறி, அவரை ஆராதிக்கின்றோம். செல்வம், புகழ், பதவி போன்ற உலகப் பற்றுகளை நீர் துறந்தீர். இறையாட்சியின் வளர்ச்சிக்காக உம்மையே கையளித்தீர். கிறிஸ்துவை மக்களுக்குத் துணிவுடன் போதித்தீர். இவ்வாறு கிறிஸ்துவுக்கு உகந்த சீடராக வாழ்ந்து, இறுதியில் உம் உயிரையே அவருக்குக் காணிக்கையாக்கினீர். இரத்தம் சிந்தி கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்த தேவசகாயம் பிள்ளையே, உம்மைப் போல நாங்களும் கிறிஸ்துவுக்கு இறுதிவரை பிரமாணிக்கமுள்ள சீடர்களாக வாழ்ந்து, விண்ணக வாழ்வின் பேரின்பத்தைப் பெற்று மகிழ்ந்திட எங்களுக்காக இறைவைன மன்றாடும். ஆமேன்..


செபத்தை வெளியிட்டவர்
மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ்
கோட்டாறு ஆயர்

அறிமுகம்

பெயர்                                            :  மரியா பிளாரன்ஸ் ஆரோக்கியம்
கணவர்                                        :  திரு.ஆரோக்கியம்.ஜி(முதுநிலை ஆசிரியர்)
பணியாற்றிய இடங்கள்      :  அகில இந்திய வானொலியில் பகுதி நேர நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர்                      

                                                          கோழிக்கோட்டைத் தலையிடமாக கொண்டு செயல்படும் ஷாலோம் குழுமத்திலிருந்து வெளியாகும் ஷாலோம் டைம்ஸ் மாத இதழின் இணையாசிரியர்
கல்வி                                        : முதுநிலை இயற்பியல் 

தற்போது                                 : மொழிபெயர்ப்பாளர் மற்றும் இல்லத்தரசி
மொழிபெயர்த்த நூல்கள்   : வெற்றி தரும் ஆண்டவர்(ஆசிரியர்: ஷெவலியார் பென்னி புன்னத்தறா)
தற்போது மூன்று புத்தகங்களுக்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.